பிரேசிலைச் சேர்ந்த அந்த பெற்றோருக்கு, முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தை 24 மணி நேரம் உயிருடன் இருப்பதே அதிசயம் என்று மருத்துவர்கள் கூற, அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஆனால், மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கி, பலருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில், Claudio Vieira de Oliveira என்ற அந்த குழந்தை வளர்ந்து, இன்று 44 வயது ஆணாக நிற்கிறது.
Claudio, arthrogryposis multiplex congenita என்ற அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டதால், தலைகீழ் தலையுடன் பிறந்தார்.
அந்த நோய் காரணமாக, Claudioவின் கால் தசைகள் வலுவிழந்து, கைகள் நெஞ்சுடன் ஒட்டி, தலை முதுகு பக்கம் பின்னோக்கி வளைந்து காணப்படுகிறது.
எனக்கு ஒரு குறையும் இல்லை, என் வாழ்க்கை சாதாரணமாக சென்றுகொண்டிருக்கிறது என்று கூறும் Claudio, ஆனால், இந்த கொரோனா மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. அது கொலைகார நோய் என்பதால் பயப்படுகிறோம், கடவுளே, இந்த பொல்லாத நோயிடமிருந்து என்னைக் காப்பாற்று என்கிறார்.
தன் அன்புத் தாயின் உதவியுடன் வீட்டிலேயே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார் Claudio.
அவருக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும், பார்ப்பது, சுவாசிப்பது, சாப்பிடுவது மற்றும் குடிப்பது போன்ற விடயங்களில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது நிச்சயம் அவர் பெற்றோர் செய்த புண்ணியத்தால்தான் இருக்கும்.
தனது நிலைமையை மற்றவர்களுக்கு உத்வேகமளிப்பதற்காக பயன்படுத்துகிறார் Claudio. தன்னைக் குறித்து ஒரு டிவிடி தயாரித்திருக்கிறார், சுயசரிதை எழுதியிருக்கிறார், அத்துடன், 2000ஆம் ஆண்டு முதல் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றியும் வருகிறார் அவர்.
ஆனால், இந்த பாழாய்ப்போன கொரோனாவால் அவர் உரையாற்றுவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 28 அன்று Pernamubco மாகாணத்தில் பேச ஒரு அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது, இந்த கொரோனா குறைந்தால் பேசலாம் என்கிறார் Claudio.
கொரோனா முடிந்தபின் மீண்டும் வேலைக்கு செல்ல விரும்புகிறார் Claudio. ஆம்! அவர் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலிருக்கும் குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனமான ‘Alegra-te’ என்ற கிறிஸ்தவ அமைப்பில் ஏற்கனவே தன்னார்வலராக பணியாற்றிவருகிறார்!
பல ஆண்டுகள் வாழவேண்டும், அதுதான் என் ஆசை என்கிறார் Claudio… இறைவன் இந்த கொரோனாவையும் அகற்றி, Claudioக்கு நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்!