ஜோசியரின் பேச்சை நம்பி 13 வயது சிறுவனை திருமணம் செய்த ஆசிரியை அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜலந்தரின் பஸ்தி பாவா கெல் பகுதியில் வசிக்கும் பெண் ஆசிரியைக்கு செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளி போயிருக்கிறது. தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவனை ஆசிரியர் ஒருவர் கட்டாய திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலக்கட்டத்தில் கூட மூட நம்பிக்கைகளும் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
இதனால் கவலையடைந்த குடும்பத்தினர் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட சிறுவன் ஒருவனுடன் சம்பிரதாயமாக திருமணம் செய்தால் போதும் அதன் பிறகு ஆசிரியைக்கு வழக்கமாக திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று குடும்ப ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.ஜோதிடரின் வார்த்தையை அப்படியே கேட்டு குடும்பத்தினர் தன்னுடன் பயிலும் மாணவனை வீட்டில் இருந்து டியூஷன் எடுப்பதக கூறி தங்கள் வீட்டுலேயே ஒரு வாரம் தங்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன் பின்பு மாணவனின் பெற்றோருக்கு தெரியாமல் சிறுவனுடன் கட்டாயத்துமானத்தை முடித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு பிறகு வெற்றிக்கு திரும்பிய சிறுவன் நடந்த காரியங்களை அனைத்தையும் தனது பெற்றோரிடம் சொன்னதும் கொதித்தெழுந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.