மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் : போக்சோவில் கைது

மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள பெருங்காட்டூர் காலணி பகுதியை சேர்ந்தவன் ரமணா. அரசு கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரமணா, கடந்த 20ம் தேதி மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளான்.

அங்கு மாணவியிடம் ஆசைவார்த்தைக்கூறி, பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளான். அப்போது ரமணா மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை சக நண்பர்களுக்கு பகிர்ந்து வந்த ரமணா, மாணவிக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்து, அவரை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இந்தநிலையில், ரமணாவின் தொடர் தொல்லையை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்த மாணவி, இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். செய்யார் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் ரமணாவை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Exit mobile version