பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆவது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி பிரபலம் ஆனவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பகுதி வெற்றியாளர் ஆரவ். இவருக்கு, கவுதம் மேனனின் ஜோஷுவா இமை போல் காக்க படத்தின் நாயகி ராஹீலுடன் நேற்று திருமணம் நடந்தது.
சமூக வலை தளங்களில் புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றன.
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாண் மாஸ்டர், காயத்ரி ரகுராம், வையாபுரி, ஆர்த்தி & கணேஷ், தயாரிப்பாளர் சுரபி மோகன், டைரக்டர் சரண், ஒளிப்பதிவாளர் சதிஷ், சுஜா வருணீ & அவரது கணவர் சிவா, இயக்குனர் சரவணன், சங்கீதா, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குனர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் விஜய், தயாரிப்பாளர் தேவா, கவிஞர் ஸ்நேஹன், கணேஷ் வெங்கட்ராம், காஜல் பசுபதி, வருண், இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் சைமன், நடிகர் சக்தி, ஒளிப்பதிவாளர் சக்திவேல் ஆகியோரும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.
