நடிகை குஷ்பு பாஜகவில் இணைவது மகிழ்ச்சி என அமைச்சர் ஜெயகுமார் கருத்து.
நீண்ட நாட்களாக காங்கிரஸ் கட்சியில் நிலவி வந்த குழப்பம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆம்! காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து இன்று குஷ்பு நீக்கியது. இதையடுத்து குஷ்பு சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில் தன்னை காங்கிரஸ் கட்சி அடைத்து வைத்துள்ளதாகவும், சில அதிகாரத் தலையீடல் உள்ளதாகவும், உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் தான் பதவி , பணம் , புகழ் பெறுவதற்காக காங்கிரஸில் இணையவில்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குஷ்பு இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் குஷ்பு இன்று பாஜக தலைவர் நட்டா தலைமையில் பாஜகவில் இணைவுள்ளார்.
இதுகுறித்து தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நடிகை குஷ்பு பாஜகவில் இணையவுள்ளது குறித்து கூறியுள்ளதாவது:
அதிமுகவின் கூட்டணிக்கட்சியான பாஜகவின் இணைவது மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.