அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது ஆதரவாளர்களுடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
ADMK former MLA Markandeyan

வருகின்ற 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னனி கட்சிகள் மற்றக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

மேலும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன் தலைமையில், தொழில்அதிபர்கள் கே.செல்வகுமார், கரையடிசெல்வன், அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் இனாம் அருணாசலபுரம் ஆர்.துரைபாண்டியன், ஆற்றங்கரை வி.சீத்தாராமன், ரஜினி மக்கள் மன்ற விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் சி.விநாயகமூர்த்தி, மேலநம்பிபுரம் எஸ்.பாலமுருகன் (ஊராட்சி செயலாளர்), எஸ்.செல்வகுமார், ரஜினி மக்கள் மன்ற விளாத்திகுளம் ஒன்றிய இணைச் செயலாளர் அ.பாலமுருகன், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு த.தவசி உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை மு.க. ஸ்டாலின் வரவேற்று, அனைவருக்கும் தி.மு.க. உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

அப்போது தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் மார்க்கண்டேயன் தி.மு.க.வில் இணைந்ததால், விளாத்திக்குளத்தில் தி.மு.க. பலம் அதிகரித்துள்ளது என கருத்துகள் வெளியாகியுள்ளன.

Exit mobile version