20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிந்த முள்ளிப்படி ஏரி – ஆணை திறந்துவிடபட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி…

தொட்டியம் அருகே முள்ளிப்பாடி ஏரி 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடி ஊராட்சியில் 306 ஏக்கர் பரப்பளவில் முள்ளிப்பாடி ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்த ஏரிக்கு காடுவெட்டி காவிரி கரையோரத்தில் உள்ள பங்களா என்ற இடத்திலிருந்து வடகரை வாய்க்காலில் கிளை வாய்க்காலாக பிரிந்து வரும் முள்ளிப்பாடி வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்தடைவது வழக்கம்.

இந்த ஏரியிலோ 20 வருடமாக தண்ணீர் வந்து நிரம்பாமல் அனைவரின் நிலமும் வறண்டு காணப்பட்டு வந்தது. இதனால் அங்குள்ளர்வர்கள் சேர்ந்து முள்ளிப்பாடி வாய்க்கால் கடந்தாண்டு குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் பல லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது. ஆனாலும் தண்ணீர் ஏரிக்கு பாதியளவு மட்டுமே வந்தடைந்தது.

பின்னர் முள்ளிப்பாடி வாய்க்காலில் அலகரை பகுதியில் உள்ள திட்டுகளை அகற்றி ஏரிக்கு தண்ணீர் சென்றடையும் வகையில் சீரமைத்தனர். இவ்வாறு இதனை முயற்சிகளுக்கு பிறகு இந்த ஏரியில் இருபது ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது. மேலும் வருகிற ஆண்டு இந்த முள்ளிப்பாடி ஏரியை முழுமையாக தூர்வாரி 100 கன அடி தண்ணீர் நிரம்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version