என்னடா நடக்குது இங்க? காஞ்சனா படத்திற்கு எதிர்ப்பு!

காஞ்சனா தமிழ்ப் படத்தின் இந்தி மறு ஆக்கத்திற்கு லட்சுமி பாம் என்ற பெயரிட்டு வெளியிடவிருக்கிறார்கள். அக்ஷய் குமார் நடிக்கும் லட்சுமி பாம் என்ற இந்தப் படத்தைப் புறக்கணிக்குமாறு ட்விட்டரில் கருத்துக்கள் பதிந்த வண்ணம் உள்ளன.
aksha

காஞ்சனா என்ற தமிழ்ப் படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் இந்தி மறு ஆக்கத்திலும் ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில், மத உணர்வுகளைத் தாக்கியதாகவும், இந்து சமயத்தை சரியாக காண்பிக்கவில்லை என்றும் கூறி, மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்தப் படத்தைப் புறக்கணிக்குமாறு கூறி வருகின்றனர். #boycotlaxxmibom #Shameonakshaykumar டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

அவர்கள் கூறும் காரணங்கள் இவை…

ஹீரோ பெயர் ஆசிப். ஒரு காட்சியில் சூலம் வைத்திருப்பதுபோல் வருகிறது. இது எப்படி சரியாகும்?

அவர் காதலிக்கும் பெண் பெயர் பிரியா. இது தவறல்லவா? என்ன கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார்கள்?

படத்தின் பெயரிலேயே பிரச்சனையாம்..இந்து கடவுளை தான் பெயராக வைக்க வேண்டுமா?

இவ்வாறெல்லாம் கேள்விகள் எழுப்பப் படுகின்றன. இந்தச் சூழலைச் சரிசெய்ய பட நிர்வாகம் என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை.

Exit mobile version