சென்னை குடிநீர் வாரியத்தின் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திறன்கொண்ட நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, கொட்டிவாக்கம்,வேளச்சேரி, திருவான்மியூர், பாலவாக்கம், பெருங்குடி, சோழிங்க நல்லூர், ஈச்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் இன்று (ஜுலை 23) முதல் ஜூலை 25ம் தேதி காலை 9:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது
எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைக்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசர குடிநீர் தேவைக்கு வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் 8144930913 என்ற எண்ணுக்கும், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள் 8144930914 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். ஈச்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் 81444930915 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.