ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையில் இருந்து ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம் சேத்துமடை கால்வாய் ‘அ’ மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டு கால்வாய் ‘அ’ மண்டல பாசன பகுதிகளுக்கு நாளை முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 548 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும்.என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version