ஆல்யா மானஸாவின் குழந்தை செய்யும் குறும்புகள்! வைரல் ஆகும் வீடியோ!

மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற வாம்மா துரையம்மா பாடலை அவர் பாட, அதற்கேற்ப அவரது செல்ல மகள் அழகான expression கொடுக்க, இந்த வீடியோ பார்க்கவே மனதை கொள்ளைகொள்கிறது.

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அய்லா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

பிரபல விஜய் டிவி ஜோடியான ரியோ மற்றும் ஸ்ருதி ஆகியோருடன் எடுத்த புகைப்படம் ட்விட்டரில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஒரே மருத்துவமனை, ஒரே நேரத்தில் அப்பாவாகிறோம்!
சஞ்சீவ் ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம்

இந்நிலையில் சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை அண்மையில் பகிர்ந்துள்ளார். மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற வாம்மா துரையம்மா பாடலை ஆல்யா மானசா பாட, அதற்கேற்ப அவரது செல்ல மகள் அழகான expression கொடுக்க, இந்த வீடியோ பார்க்கவே மனதை கொள்ளைகொள்கிறது. இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருவதுடன், மிகப் பிரபலம் ஆகி வருகிறது.

சஞ்சீவ் தற்போது காற்றின் மொழி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version