செப்டம்பர் 5 ல் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ள அரசு!

ஆந்திராவில் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 5 ல் பள்ளிகளை  திறக்க முடிவு எடுத்துள்ள அரசு!

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாணவர்களின் நலனினைக்கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் அந்தந்த மாநில அரசுகள் தேர்வு 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களை தவிர்த்து, மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தற்போதும் கொரோனா தொற்றின் வேகம் குறையாத காரணத்தினால் தான் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றனர். இந்த சூழலில் தான் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஆந்திராவில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் தான் இறுதி எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆந்திராவில் ஆகஸ்டு 3ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா தொற்று வேகமாக பரவிவந்ததன் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version