கண்டலேறு கிருஷ்ணா தண்ணீர் தமிழகத்தின் எல்லையை வந்து அடைந்தது…

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று இரவு தமிழக எல்லையை வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு இன்று வந்து சேரலாம் என கருதப்படுகிறது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் அடிப்படியில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்தில் உள்ள பூண்டு ஏரிக்கு நெல்லூரில் இருக்கும் கண்டலேறும் அணியாயிருந்து தரப்படுகிறது.

இவ்வாறு இருக்க தற்போது தமிழகத்திலும், தமிழகத்தை சுற்றி உள்ள மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் எல்லா ஏரிகளும் வெகு விரைவாக நிரம்பு வந்துகொண்டு இருக்கின்றது. கடந்த ஆண்டு கண்டலேறு அணியிலிருந்து பூண்டு அணைக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரால் பூண்டு ஏறி நிரம்பி காணப்பட்டது.

அதையடுத்து நெல்லூர் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்திவிட்டது. இதனால் பூண்டு ஏறி வறண்டு போனது மேலும் மக்களும் அவதி பட்டு வந்தனர். இதனால் தமிழகத்தில் இருந்து ஆன்ற அரசிற்கு தொடர்ந்து வேண்டுதல் விடுததால் இப்போது மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு நேற்று இரவு 8 மணிக்கு வந்தடைந்தது. உதவி பொறியாளர்கள் மற்றும் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி கிருஷ்ணா தண்ணீரை வரவேற்றனர்.

இப்போது வந்து கொண்டிருக்கும் தண்ணீரால் பூண்டு ஏரியின் நீர் மட்டம் உயரும் என நினைக்கின்றனர்.

Exit mobile version