ஆந்திராவில் கோவில் தேர் தீப்பிடித்து நள்ளிரவில் எரிந்தது-பக்தர்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலுக்கு சொந்தமான தேர் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

கோதாவரி:

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் இருந்த கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது.திடீரென நேற்று நள்ளிரவு இந்த தேர் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தேர் முற்றிலும் எரிந்து செயலற்றுப்போனது.அதிகாலை 3 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தேருக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமான வரலாறு சிறப்பு மிக்க தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

Exit mobile version