கேடி ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்டு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மதன் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் ராகவனின் வீடியோ வெளியிடப்பட்டது என மதன் தெரிவித்தார். ஆனால் அதற்கு மாறாக அறிக்கை வெளியானதால் கடுப்பான மதன் இன்று அண்ணாமலையின் ஆடியோ அடங்கிய ஓர் விளக்க வீடியோ வெளியிட்டார்.
இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட யூ டியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்துப் பேசியது உண்மை.
முதல் முறையாக தன்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்து பேசிய போது கட்சியின் பொறுப்புகளில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கூறினார்.
மேலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒருவரின் உண்மை தன்மையை அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.