உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள சாதாபாத் பகுதியில் ஜதோகி கிராமத்தைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் அலிகாரில் 20 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அங்கு அவரை உறவினர் சிறுவன் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் சுயநினைவை இழந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த அந்த சிறுவனை கைது செய்த அலிகார் போலீஸார் அவரை சிறுவன் சீர்திருத்த இல்லத்தில் அடைத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.