தமிழகத்தில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதன்படி, இதற்கான வேட்புமனுக்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதன்படி நகராட்சி நிர்வாக இயக்குனரம், பேரூராட்சிகள் இயக்குனரகம், ஊரக வளர்ச்சி இயக்குனரகம் ஆகியவற்றின் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கின்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றிருப்பார். மாவட்ட அளவிலான குழு அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து தகுதியான நபர்களை சம்பந்தபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக தலைவருக்கு பரிந்துரை செய்வார்கள். இந்த பரிந்துரையிடன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிக் நியமனம் செய்யப்படுவார்கள்.