தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மாநிலத் தகவல் ஆணையர்களாக வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோர்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.