தமிழ்நாட்டில், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலைநில் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது,அந்த மனு மீதான விசாரணையின் போது கடந்த 2008ம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 3ம் தேதி (செப்டம்பர் 3ம் தேதி) உத்தரவிட்டத
இதைதொடர்ந்து இந்த வழக்கில் ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், அப்போது தமிழ்நாடு அரசின் கருத்தையும் கேட்ட பின்னரே எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,
சுப்பிரமணியன்சுவாமி சார்பாக விஷேஷ் கனோடியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க அரசு அறிவித்துள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை எதிர்த்தும், கோவில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழில் அரச்சனை செய்வதை எதிர்த்தும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.