சூர்யாவை செருப்பால் அடித்தால் 1 லட்சம் தரப்படும் – அர்ஜுன் சம்பத் பரபரப்பு…

நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வழங்குவார் என அதன் துணை பொதுச்செயலாளர் தர்மா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யா அவர்கள் அணைத்து சமுக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பது அவர் வழக்கம். அதேபோல் சிறுத்தினங்களுக்கு முன்பு நீட் தேர்வினால் நாடாகும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் ஒரு சிலர் அவரை எதிர்த்து வருகின்றனர். அது மட்டுமின்றி பல பேர் அவரை பாராட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் அனுப்பியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவை இல்லை என இன்று முடிவு செய்தது.

அதுமுடியும் முன்பே இனொருவர் ஆரமித்து விட்டார், அது என்னவென்றால் திண்டுக்கல்லில் நேற்று, இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தர்மா, சூர்யா அவர்கள் அகரம் நிறுவனம் மூலம் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு இருக்கின்றார்.

மேலும் நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version