ஆன்லைன் ரம்மியில் லட்சங்களை இழந்த காவலர்… துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

சென்னையில் ஆயுதப்படை காவவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதற்கு ரம்மி விளையாட்டில் பல லட்சங்களை இழந்ததே காரணம் என தெரிய வந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்காவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், பாதுகாப்புப் பணியில் இருந்த அவர் கடந்த 4ஆம் தேதி தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள வேலுச்சாமி, அந்த விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் வரை இழப்பை சந்தித்ததாகவும் அதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version