தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பரவிவரும் கொரோனா நோய் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் இறுதி தேர்வு எழுதாமலே அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.
நோயின் தீவிரம் எப்போது குறைகிறதோ அப்போதுதான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற அதாவது தேர்வு கட்டணம் மட்டும் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
இது பல்வேறு தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது இந்நிலையில் அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்தது தவறு என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்துள்ள அரசின் நடவடிக்கை ஒரு தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையான அதிகாரம் கொண்டது எனவும் அதன் விவகாரங்களில் தலையிட அரசுக்கு எந்த வித அதிகாரம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரியர் தேர்வு எழுத பணம் கட்டி இருந்தாலே தேர்ச்சி என்று அறிவித்திருப்பது ஒரு தவறான நடவடிக்கை என்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தேர்ச்சி அடைய செய்யப்படுபவர்கள் என்று அறிவிப்பது கல்வியின் தரத்தில் பாதிப்பை உண்டாக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.