இன்றைய சதி கோட்பாடு: மன்னர் அசோகரின் ரகசிய சமூகம் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத 9 பேர் பற்றியது..!

மனித இனத்திற்கு அத்யாவசியமான 9 விடயங்களை உள்ளடக்கிய 9 புத்தகங்கள் கொடுக்கப்பட்டு மனித இனத்தை அழிவை நோக்கி செல்ல விடாமல் பாதுகாக்கும்படி அசோகரால் 9 பேர் நியமிக்கப்பட்டனர் என்கிறது ஒரு சதி கோட்பாடு.

கலிங்கர்களுடன் நடந்த போரின் விளைவைப் பார்த்து மனமுடைந்த அசோக சக்ரவர்த்தி, இனி ஒரு போதும் போர் போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்று உறுதி எடுத்தார். தன் நாடு மக்களும் தங்களது அறிவை, இந்த வகையான தீயச் செயல்களில் பயன்படுத்தக் கூடாது என்று அதற்கான முயற்சி எடுத்தார்.

தனது அன்றாடப் பணிகளுக்கு இடையே, மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க நேரம் இல்லாததால், நம்பகமிக்க 9 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு மட்டும் அறிய, ஆழ்ந்த அறிவியல் ஞானம் கிடைக்கும்படிச் செய்தார். தொழில்நுட்பங்கள், அதைப் பரிசோதிக்கும் முறைகளும் அனைத்தையும் அவர்கள் மட்டுமே செய்ய முடியும். அந்த வகையான அறிவாற்றல் சாதாரண மக்களிடம் சேர்ந்தால், அதைத் தவறான கேட்ட காரியங்களுக்கு பயன்படுத்தி விடுவார்கள் என்று எண்ணி இந்த முடிவுக்கு வந்தார்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகம் அளிக்கப்பட்டது. அதை எழுதி, திருத்தி, ஒழுங்காய்ப் பாதுகாப்பது அவர்களது கடமை. ஒருவரால் செய்ய இயலாவிட்டால், இன்னொருவர் அதைத் தொடர்வார். ஆக, எப்போதுமே 9 பேர் கொண்ட குழுவாகவே இருந்தனர். யார் அந்த 9 பேர் என்ற தகவலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.


9 விடயங்கள்: அப்படியாக அந்த புத்தகங்களில் போர், சமூகவியல், தகவல்தொடர்பு, ரசவாதம், மரணம், நுண்ணுயிரியல், ஒளி, ஈர்ப்பு மற்றும் அண்டவியல் ஆகிய 9 விடயங்கள் அடங்கி இருந்தது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ரகசிய சமூக நிகழ்வானது கிபி 270-ல் நடைபெற்றது என்று நம்பப்படுகிறது என்பதும், இது சார்ந்த ‘தி நயன் அன்நோன்’ (The Nine Unknown) என்று ஒரு நாவலும் இருக்கிறது.

Exit mobile version