ரூ.12 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா டாலர்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி : மதுரையில் சிக்கிய இருவர்!!

மதுரையில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற இரண்டு பேரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பர்னாபஸ் என்பவரது மகன் சந்திரசேகர் (29). இதே பகுதியை சேர்ந்த மரிய ஜான் என்பவரது மகன் அருள் சேகர். நண்பர்களான இருவரும் இன்று காலை மதுரையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் விமானத்தில் செல்வதற்கு தயாராக மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

அப்போது, சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகமடைந்து இவர்கள் இருவரையும் பரிசோதனை செய்தனர். சோதனையின் பேரில் விசாரணை செய்ததில், விமானப் பயணத்தின் போது சுமார் 12 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குடியேற்றத் துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version