பர்கர் சாப்பிட்டால் காசு: அழைக்கிறது இணையதளம்!

ஆம்ஸ்டெர்டாம் நகரில் அமைந்திருக்கும் BonusFinder.com நிறுவனம், அமெரிக்காவில் உள்ள சிறந்த சீஸ் பர்கர் தேர்ந்தெடுக்க சோதனையாளர்களை அழைத்து வருகிறது.

சுலபமாக பணம் சம்பாதிப்பது யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் சாப்பிட்டு பார்த்து கருது தெரிவித்தால் பணம் என்று சொன்னால் அனைவருமே முந்திக் கொள்வார்கள். அப்படி ஒரு அறிவிப்பை தான் இந்த நிறுவனம் செய்திருக்கிறது.

அமெரிக்காவில் பர்கர் மிகவும் பிரபலமான உணவாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்படும் இதில், கறி, சீஸ், தக்காளி சாஸ் இவை சேர்க்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு இடத்தில, ஒவ்வொரு தனி சுவை, சிறப்புடன் கிடைக்கும் என்றாலும், பெரிதும் விரும்பப்படும் வகை எந்த இடத்தில கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்

பர்கரின் தரம், பயன்படுபடும் பொருட்கள், பன்-இன் அளவு மற்றும் தரம் ஆகியவை சோதனை செய்ய ஆட்கள் தேடி வருகிறது.

500 டாலர் வழங்கப்படும் என்றும், பயணச் செலவும், பர்கர் வாங்கும் செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அக்டோபர் 9 அன்று முடிவுகள் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் அடுத்து இந்த போட்டி தொடரப்படுகிறது. BonusFinder.ca நிறுவனம் இதை நடத்துகிறது

Exit mobile version