கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ பகுதி 4-க்கான முதல் விளம்பரத்தை வெளியிட்டது.
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 4-க்கான படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கவுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ பகுதி 4-க்கான முதல் விளம்பரத்தை வெளியிட்டது.
இந்த ப்ரோமோ வீடியோவில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தற்போது, இந்த ரியாலிட்டி ஷோவில் ஷிவானி நாராயணன், அனு மோகன், பூனம் பாஜ்வா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, கோபிநாத், ரம்யா பாண்டியன், புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண், வித்யுலேகா ராமன் ஆகியோர் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.
இது உண்மையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
