விசைபபடகினில் புதிய தொழில்நுட்பம்

ஆழ்கடலில் விசைப்படகினில் மீன்கள் பிடிக்க மீனவர்கள் செல்லும் பொழுது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்த சரியான தகவல்களை தெரிவிக்க முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் செல்லும் விசைப்படகுகள் கடல் அலையின் வேகத்துக்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலையின் காரணமாக மீனவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தார். இதனை தடுக்க இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன தொலைத்தொடர்பு கருவி ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதனை சென்னை காசிமேடு மீனவர்களின் 750 விசைப்படகுகளில் பொருத்தி இதன் மூலம் அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறியவும், இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி ஜிசாட்-6 செயற்கைகோளின் உதவியில் வழியாக இயங்கும். இந்த தொழில்நுட்ப கருவியில் எஸ்.ஓ.எஸ். என்ற அவசரகால பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது. கடலில் அவசர காலத்தில் எஸ்.ஓ.எஸ். பொத்தானை அழுத்தினால் அதிலிருந்து செல்லும் தகவல்களானது படகு இருக்கக்கூடிய இடம் மற்றும் படகு பற்றிய தகவல்களை எல்லாம் மீன்வளத்துறை, படகின் உரிமையாளர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு கொண்டு சேர்க்கும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version