பட்ஜெட் இந்தியாவின் தன்னம்பிக்கையை காட்டுகிறது – பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும், உலகிற்கு இந்தியாவின் தன்னம்பிக்கையை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வளர்ச்சிக்கான புதிய பாதைகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தல், இதுவரை இல்லாத அளவுக்கு மனித வளங்களை உயர்த்துதல், உள்கட்டமைப்புக்காக புதிய பிராந்தியங்களை வரையறுப்பது, தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்வது ஆகிய புதிய சீர்திருத்தங்கள் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார், பட்ஜெட் பற்றி கூறுகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரித்த பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அவற்றை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த காலத்திற்கு ஏற்ப பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சியையும், வளர்ச்சி விகிதத்தையும் துரிதப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரிகள் அதிகரிப்பதற்கான காரணத்தை கவனத்தில் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 12.5 சதவீதத்தில் இருந்து 7 .5 சதவீதமாக குறைத்துள்ளது. முந்தைய ஆண்டுகளை விட தங்கம் போன்ற விலை மதிப்புள்ள பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலையேற்றத்தைக் குறைத்து தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியை கட்டுப்படுத்துவதாக நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version