சிரமப்படும் யானைகள்… முதுமலையில் யானை சவாரி ரத்து!!

கனமழை காரணமாக முதுமலையில் யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதுமலையில் யானை சவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இதையறிந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி சுற்று வட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. மழை நேரத்தில் யானைகள் வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளுடன் நடந்து செல்ல சிரமப்படுவதால் சவாரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Exit mobile version