கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடுகள் ரத்து; வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் !

கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடுகள் ரத்து; வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் !

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக முன்னோர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கம் நிகழ்வு இந்தாண்டு கொரோனா பரவல் தொற்று அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை தினத்தில் தான் நம் பிதுர்கள், பித்ரு லோகத்திலிருந்து கிளப்பி பூலோகம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை நினைத்து விரதமிருந்து வணங்குவதற்கான மிக உகந்த நாளாக நினைத்து ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வழிபடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதன் காரணமாக கோவில்களில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தாண்டு ஆடி அமாவாசை தினமாக இன்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க அதிகளவில் வருவார்கள் என்பதன் காரணமாக கோவில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேனி ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களுக்கு மக்கள் வருவதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முன்னோர்களுக்கு வழங்க கூடிய தர்ப்பணமும், பரிகார பூஜைகளுக்கும் அனுமதியில்லை எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக, இந்தாண்டு கோவில்களுக்கு செல்லமுடியாத மக்கள், முன்னோர்களுக்காக அவர்களது வீடுகளிலேயே விரதம் இருந்து வழிபாடுகளை நடத்திவருகின்றனர்.

Exit mobile version