பிரபல கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு!!

விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை மறித்த விவகாரம் தொடர்பாக பிரபல கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது கோவை, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை மறித்த விவகாரம் தொடர்பாக பிரித்வி ராஜ்குமார் என்பவர் தொடுத்த புகாரின் பேரில் இந்தியாவின் பிரபல பார்முலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது தொண்டாமுத்தூர் போலீஸார் ஐ.பி.சி 339 என்ற பிரிவின் கீழ் (முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பிரித்வி ராஜ்குமார் மீதும் முறையற்ற தடுப்பை ஏற்படுத்தியதாக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இரு தரப்பினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இரு தரப்பினர் மீதும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முறைப்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version