ஆஸ்திரியாவில் செல்லப் பிராணியாக வழங்கப்படும் பூனை ஒன்று கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டில் Anika Moritz (20) என்பவருக்குச் சொந்தமான Alexis என்ற பெண் பூனை ஒரு நிமிடத்தில் அதிக தந்திரங்களை (Tricks) நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தது .
அனிகாவின் தெளிவான வழிமுறைகளைப் பின்பற்றி, Alexis நம்பமுடியாத 26 தந்திரங்களை செய்துள்ளது.
Alexis 12 வார குட்டியாக இருந்த போதிலிருந்து அதற்கு அனிகா பயிற்சியளித்துவருகிறார். இப்போது Alexis-க்கு 8 வயதாகிறது.
ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் 26 கட்டளைகளுக்கு Alexis செயலை நிகழ்த்திக்காட்டியுள்ளது. இந்த கின்னஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.