பண்டிகைகள் கொண்டாடும் முறை: மத்திய அரசு அறிவிப்பு

அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் வரக்கூடிய பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
centralgovernment

பண்டிகை காலம் தொடங்குகிறது. இந்த மாதம் துர்கா பூஜை, தசரா, விஜயதசமி, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை என பண்டிகைகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த காலகட்டத்தில் பண்டிகைகளை கொண்டாடுவது என்பது சவாலாக உள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:

பண்டிகை கொண்டாட்டங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர வெளியே வரக்கூடாது.

நாடு முழுவதற்குமான 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தபோது, வரும் 15-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் எனவும் அறிவித்தது.

அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர், “கடந்த 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. வருகிற 15-ந் தேதி முதல் அவற்றை திறக்கலாம். மக்களின் பாதுகாப்புக்காக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறோம்” என்று அவர் கூறினார்.

வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Exit mobile version