அதிகரிக்கும் ஒமிக்ரான்… தமிழகத்திற்கு விரையும் மத்திய சுகாதார குழு!!


தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழு ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்லி,
கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு சமீப நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு-வுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் போது கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்திய மாநிலங்கள் மற்றும் ஒமிக்ரான் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு மத்திய குழு-க்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு அக்குழு அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,பீகார்,மேற்கு வங்கம்,மிசோரம்,உத்தரபிரதேசம்,ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்படுகிறது.

இக்குழு மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்தல்/ஒமிக்ரான் பாதிப்பு கண்டறிதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version