கேன்சர் நோயால் 4 ஆண்டுகள் போராடி வந்தார்: அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியீடு
உலகெங்கும் பிரபலமான மார்வெல் படங்களில் பிளாக் பாந்தர் பெரும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். இதில் தனது அபாரமான நடிப்பால் மக்களை பெரிதும் கவர்ந்தவர் சேட்விக் போஸ்மன். 43 வயது மட்டுமே ஆன இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தனது வீட்டில் உயிர் நீத்தார்.
ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் 4 ஆண்டுகள் கேன்சர் நோயினால் அவதியில் இருந்தபோதும், படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிளாக் பாந்தர் படத்தில் டீ-சாலா (t’challa) அரசனாக நடித்தது அவர் நடிப்பின் பெரிய வெற்றியாகும் என்று அவர் குடும்பம் தகவல் தெரிவித்தது. சிகிச்சைகள், கீமோதெரபி இவைகளை மேற்கொண்டிருக்கும்போதே அவர் பல படங்களை நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நினைவிலிருந்து என்றும் நீங்காதவாறு தன திறமையான நடிப்பால் பலரையும் கவர்ந்த இவரது பிரிவு ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவர்க்கும் அதிர்ச்சி அளிக்கிறது.