திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் திமுக பொருளாளரும் சேர்மன் அண்ணாதுரை அறக்கட்டளையின் பொருளாளரும் ஆன அண்ணா அருணகிரியின் நாற்பத்தி ஒன்பதாவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
அண்ணா அருணகிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், வணிகர் சங்கத்தினர், திமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அண்ணா அருணகிரி பேசியதாவது; எனது தந்தையார் அண்ணாதுரை திமுகவின் கழக முன்னோடி, திருப்பத்தூர் பகுதியில் திமுக கட்சியை வளர்த்து சேர்மன் ஆகி ஏழை எளியவர்களுக்கு மக்கள் பணியாற்றியவர். அதனை பின்தொடர்ந்து நானும் மக்கள் பணியாற்றி வருகிறேன். அவருடைய நினைவாக நடந்த இந்த நிகழ்ச்சியில் கல்வி படிக்க முடியாமல் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு பள்ளி படிப்புக்கு உதவி தொகை வழங்கி உள்ளேன். அதேபோல கண்பார்வையற்றோர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனா காலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 244 பேர் உயிரிழந்தனர். அவர்களுடைய சடலத்தை தங்களது உறவினர் கூட பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது அப்போது மனித நேயமிக்க மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த நண்பர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை தகனம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர் அவர்களை நான் மனதார பாராட்டி அவர்களுக்கு வெகுமதியும் கேடயமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தொடர்ந்து ஏழை மக்களுக்கு என இலவச ஆம்புலன்ஸ் கேட்டு உள்ளனர்.அதனை விரைவில் வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களில் ஒருவனாக மக்களின் சேவகனாக சமூக சேவையில் நாள்தோறும் ஈடுபட்டு வருகிறேன்.
வறுமையில் வாடும் குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறோம். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஏழை மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்டவைகள் சுமார் 2 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அண்ணா அருணகிரி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி, திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அமைப்பினருக்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, ரெட் கிராஸ் அமைப்பு தலைவர் தேவராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த வாணியம்பாடி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத்தலைவர் ஆர்ஜி வெங்கடாசலம், திமுக பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணா அறக்கட்டளை செயலாளர் எம்எல்ஏ நல்லதம்பி நன்றி கூறினார்.
