கோவில்களின் உள்ள அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை:
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர் பெயர்களை வெளியிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,பல்வேறு கேள்விகளை முன்னெடுத்தியது சென்னை உயர்நீதிமன்றம்.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் உள்ள அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது? அந்தந்த கோவில் நிர்வாகிகளின் பெயரை ஏன் கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிட கூடாது ?
மேலும், பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதில் தவறு என்ன உள்ளது ? என அடுக்கடுக்காய் பல கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் ,இந்த வழக்கில் கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு வருகின்ற செப்டம்பர் 17ம் தேதிக்குள் விடை அளிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.