எகிறி மும்பையை அடக்கிய சென்னை பந்துவீச்சாளர்கள்..163 ரன்கள் இலக்கு

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின .

அபுதாபியில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்ச்சை தேர்வு செய்தது.

மும்பை அணியின் ரோகித் சர்மா – டி காக் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். தீபக் சஹார் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, ரோகித் சர்மா தொடரை அசத்தலாக தொடரை தொடங்கினார். டி காக் தனது பங்கிற்கு அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்ட மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இதையடுத்து, கடந்த ஏலத்தின் போது சென்னை அணி 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த, பியூஸ் சாவ்லா பந்து வீச வந்தார். தோனியின் முடிவு என்றும் தவறாகது என்றபடியே, தனது முதல் ஓவரிலேயே, 11 ரன் எடுத்து இருந்த போது ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் பியூஸ் சாவ்லா. அடுத்து சிறிது நேரத்திலேயே, மறுபுறம் அதிரடியாக ஆடி வந்த டி காக் 33 ரன்களில் சாம் குர்ரன் பந்து வீச்சில் வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் 17 ரன்களில் வெளியேற, சிறிது நேரம் தாக்குப்பிடித்த திவாரி 42 ரன்கள் அடிக்க, வந்த உடன் 2 சிக்சர்கள் அடித்து மிரட்டிய ஹர்திக் பாண்டியா 14 ரன்களில் அவுட்டானார். குறிப்பாக திவாரி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தூக்கி அடித்த பந்தை, டு ப்லேசி பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

ஒரு கட்டத்தில் மும்பை அணி 180 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டால் மும்பை அணியின் ரன் ரேட் சரிய தொடங்கியது.

இறுதி கட்டத்தில் அதிரடி காட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குருணால் பாண்டியா 3 ரன்களில், பொல்லார்ட் 18 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதையடுத்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக நிகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்த, சாஹர், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Exit mobile version