மக்கள் சகோதரத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் முதல்வர் பக்ரீத் வாழ்த்து

மக்கள் அனைவரும் சகோதரத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தலைவர்கள் அனைவரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பக்ரீத் திருநாளான இந்நன்னாளில், எனது அன்பிற்குரிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.

இத்தியாகத் திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version