தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் நிதி அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு, சூரியம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில், சீர்காழி, புதுப்பட்டினத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர், தஞ்சாவூர், வெண்டையன்பட்டியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் தனது வீட்டின் அருகில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தார், சிவகங்கை, கழுகேர்கடையைச் சேர்ந்த சாதிக் அலி, திருவள்ளூர், நெமிலியைச் சேர்ந்த ராஜன், ஆறுமுகம், பள்ளிப்பட்டு, கொளத்தூர் துணைமின் நிலையத்தில் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த முனுசாமி, கோத்தகிரி, ஜெகதளாவைச் சேர்ந்த பிரவீன், குன்னூர், அதிகரட்டியைச் சேர்ந்த மங்கம்மா, சேலம், எடப்பாடியைச் சேர்ந்த பாபு, ஆரணி, தச்சரம்பட்டைச் சேர்ந்த சிபிராஜ் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து நான் வேதனை அடைந்தேன்.
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.