கர்நாடகாவில் இன்று முதல் ஊரடங்கு ரத்து! வழக்கம் போல் மக்கள் பணிக்கு செல்ல முதல்வர் உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கம் போல் மக்கள் பணிக்கு செல்லலாம் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இன்று முதல் ஊரடங்கு ரத்து!   வழக்கம் போல் மக்கள் பணிக்கு செல்ல முதல்வர் உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் பெங்களுரு உள்ளிட்ட மற்ற பகுதிகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அதிரடி அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.

அதில் பொது முடக்கததால், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது எனவும் அது ஒரு தீர்வாக அமையாது எனக்கூறிய அவர், மக்கள் தான் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். எனவே முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் பொருட்டு மக்கள் வழக்கம் போல் பணிகளுக்கு செல்லலாம் என உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதோடு மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். மேலும் மாநில அரசு கொரோனா தொற்று தடை செய்யப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

Exit mobile version