புதுச்சேரியில் கல்லூரி கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் உத்தரவு; மகிழ்ச்சியில் மாணவர்கள்!

புதுச்சேரியில் கல்லூரி கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் உத்தரவு; மகிழ்ச்சியில் மாணவர்கள்!

புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி கட்டணத்தை ரத்து செய்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பலர் வேலைவாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் வருமானமின்றி அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் தான் இன்று சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த உரையில் பேசும் போது, மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது அவர்களுக்கான விண்ணப்பங்களை இலவசமாக வழங்குவதோடு , கல்விக்கட்டணமும் முழுமையாக ரத்து செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல முறையில் இணையதள கல்வி சென்றடைய இலவச லேப்டாப் அனைவருக்கும் வழங்கப்படும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பினால் அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்ததோடு அரசிற்கும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

Exit mobile version