தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் மழை நீர் தேங்குவதை எப்படி தடுக்கலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் பருவமழை கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பல தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. அது மட்டுமல்லாமல், அணைகள் நிரம்பி நீர் வெளியேற்றப்பகிறது.
இந்நிலையில், மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிப்பிற்குள்ளானது. அந்த வகையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் சென்று வெள்ள பாதிப்பை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் மழை நீர் தேங்குவதை எப்படி தடுக்கலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் முதல் முறையாக இந்த 18 பேர் கொண்ட குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.