கல்லிலோர் கலை வண்ணம் கண்ட ‘பொன்னியின் செல்வர்’ ராஜ ராஜ சோழனின் கதை: இன்றும் விடை தெரியாத சில மர்மங்கள்!

தஞ்சை மண்ணை ஆண்ட ராஜ ராஜ சோழ மன்னனின் 1035 ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மூவேந்தர்கள் என சொல்லப்படும் சேர, சோழ, பாண்டியர்களே மன்னராட்சி முறையில் ஆட்சி செய்து வந்த நாடு இது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மன்னர்கள் திறம்பட ஆண்டு தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி வந்தனர். இதில் ராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலம் சோழ மன்னர்கள் திறம்பட ஆண்ட காலம். ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலம் சோழர்களின் பொற்காலம் என்றும் கூறப்படுகிறது.

யார் இந்த ராஜ ராஜ சோழன்?

பல கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்களில் கூறப்படும் தகவல்களின் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் சுந்தர சோழரின் இளைய மகன் ஆவார். இவருக்கு ஆதித்ய கரிகாலன் என்னும் மூத்த சகோதரனும், குந்தவை என்னும் மூத்த சகோதரியும் உண்டு.

இவரது இயற்பெயர் அருள்மொழி வர்மர். ஒரு முறை இவர் சிறுவயதில் பொன்னி ஆற்றில் தவறி விழுந்து அந்த நீரினாலேயே காப்பாற்றப்பட்டதால் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படுகிறார் என கதைகள் சொல்கிறது.

சிறிய வயதிலேயே ராஜ்யத்தில் நுழைந்து சோழர்களின் கடல் வழி ராணுவத்தை பலப்படுத்தியவர். பல நாடுகளை கைப்பற்றினார்.

இலங்கை முதல் மாலத்தீவுகள் வரை நாட்டின் பரப்பளவை விரிவு படுத்தினார்.

சைவ சமயத்தை சேர்ந்த இவர் தான் போரில் வெல்லும் அத்தனை ஊர்களிலும் சிவன் கோவிலை நிறுவினர்.

பெண்மை போற்றிய பொன்னியின் செல்வர்:

நாம் காலப்போக்கில் மறந்த தமிழ் பெயர்களில் குந்தவை பெயரும் ஒன்று குந்தவை நாச்சியார் என்னும் ஒற்றைப்பெயர் சோழ சாம்ராஜ்யத்தையே கட்டி ஆண்டது ராஜ ராஜ சோழனின் காலத்தில் போர்களமாகட்டும் நாட்டின் அரசியல் ஆகட்டும் ராஜ ராஜ சோழனின் அத்தனை அசைவுகளும் குந்தவை நாச்சியாரின் சொல்லே. வீட்டு பெண்ணின் அறிவுரைகளை கேட்டு நாட்டை ஆண்ட மன்னன் ஆவார்.

ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோவில் உலக அரங்கில் தமிழ்நட்டின் அடையாளமாகவே இன்றும் இருக்கிறது.

இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னம் ஆகும்.

அற்புதமான கட்டிடக் கலைகளை கொண்ட இந்திய கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த கோயிலின் அடிப்பாகம் 16 அடி உயரம் கொண்டது. ஒரே கல்லில் அமைக்கப்பட்ட நந்தி 20 டன் எடையையும் இரண்டு மீட்டர் உயரம் ஆறு மீட்டர் நீளம் இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டது.

முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது. இதை தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது.

“நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க….”

இதற்கு ஏற்றார் போல் அந்த கோவிலின் கல்வெட்டுகளில் கோவில் கட்ட காரணமாகவும் துணையாகவும் இருந்த அத்தனை பேரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி  1000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

ராஜ ராஜ சோழன் வரலாற்றை சுற்றிய மர்மங்கள்:

நாடே போற்றும் மாமன்னர் ராஜ ராஜ சோழனை சுற்றி சில மர்மங்களும் இருக்க தான் செய்கின்றன.

ராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரன் கரிகாலன் இறப்பில் இவருக்கும் குந்தாய் நாச்சியாருக்கும் தொடர்பு இருக்கலாம் என பொன்னியின் செல்வன் புதினத்தின் வாயிலாக சந்தேகிக்கிறார்கள்.

இவருடைய இறப்பு செய்தி சரியாக குறிப்பிடப்படவில்லை.

ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒரு பெண் இவரை தள்ளி விட்டு கொன்றதாக சொல்கின்றனர்.

சைவ சமயத்தை சேர்ந்தவர்களின் உடலை புதைக்காமல் எரிக்கவே செய்வார்கள் அப்படி இருக்கும் பொது சைவ சமயத்தை தழுவிய ராஜ ராஜ சோழனின் கல்லறை என கூறப்படுவது தவறானது என கூறுகின்றனர்.

Exit mobile version