ஐ.பி.எல் போட்டிகள் 2020 : துபாய் வந்திறங்கினார் கெயில்

மகிச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டார்

கடந்த வாரம் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்டின் 34வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் போல்ட் கேட்டுக்கொண்டார்.

இதில் கிரிஸ் கெயில் பங்கு கொண்டதால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். வரும் ஐ.பி.எல் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து பஞ்சாப் அணி தெரிவித்தது. ஐ.பி.எல். போட்டிக்கு துபாய்ப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனை நடக்கும் என்றும், விமான நிலையத்தில் இறங்கியவுடன் மீண்டும் பரிசோதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. கிரிஸ் கெயில் தனது சமூக வலைதளங்களில் இச்செய்தியை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவருக்கு சோதனை நடத்தியதில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து துபாய்க்கு வெற்றிகரமாக வந்து இறங்கினர் கெயில்.

கிரிஸ் கெயில் கடைசியாக, வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று விளையாடினார்.

Exit mobile version