தற்போது கொரோனா நோய் தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. இது நல்லமுறையில் குறைந்தால் விரைவில் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது, ஜூன் மாதம் முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பொது போக்கு வாரத்திற்கு அனுமதி அளிக்க பட்டுள்ளது, எனினும் மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல போக்குவரத்தை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர், மாநில போக்குவரத்து தொடர்பாக முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதை இப்போது காண்போம்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
மாநில அரசு கொரோனாவை தடுப்பதற்கான முயற்சிகளை துரிதமாக செய்துவருகிறது. நோய் தொற்று இருக்கும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழு அமைத்து பகுதிக்கே சென்று அங்குள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிகுறி இருந்தால் RTPCR பரிசோதனை செய்து அதில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்த நோய் தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. இது நல்லமுறையில் குறைந்தால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.