மறைந்த அமைச்சரின் சகோதரியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்.
தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி காலமானார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சரின் அன்பு சகோதரி திருமதி. வசந்தா அவர்கள் உடல்நிலை குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களின் மறைவுக்கு தான் மிகவும் வருந்துவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அவர் இரங்கல் தெரிவிக்கும்போது கூறியது யாதெனில் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சரின் அன்பு சகோதரி திருமதி. வசந்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று(16.9.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
திருமதி. வசந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். திருமதி வசந்தா அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.