தமிழக அரசிற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்… கேரளாவிற்கு மத்திய அமைச்சர் கடிதம்!!

முல்லை பெரியாறு அணை நீர் தேக்குதல் தொடர்பாகவும், அணை பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாகவும் மத்திய நீர் வளத்துறை அமைச்சக இணை செயலாளர் சஞ்சய் அவஸ்தி கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது எனவும் அணையை பலப்படுத்துவதும் வகையில் பேபி அணையை வலுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை கேரள அரசு ஏற்று உரிய ஒத்துழைப்பை நல்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர் அளவு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version