இந்தி திணிப்பு வழக்கில் கோவை ஆணையர் இடமாற்றம். நான் எந்த வகையிலும் இந்தியைத் திணிக்கவில்லை என விளக்கம் அளித்தார்
கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தி திணிப்பு குறித்த புகார் இவர் மீது வைக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் இன்று முக்கியமான பொறுப்புகளில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு அந்த பொறுப்பில் புதிய ஐஏஎஸ் அதிகாரிங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுக்க இந்த சம்பவம் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. மாநகராட்சி பள்ளிகளில் இந்தி திணிப்பு குறித்த விண்ணப்பம் ஒன்று இணையத்தில் பரவி சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பழனி கோயில் நிர்வாக அதிகாரி ஜெயபால் ரெட்டி கிருஷ்ணகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில், விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இனி அடிக்கடி அரசின் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது சொல்கிறது வட்டாரம்.