தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முழுமையான தடை; டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருப்பது எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டெல்லி,
காற்று மாசுபாடு அதிகரிக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க முழுமையான தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து ராகுல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பட்டாசு வெடிப்பதால் மட்டும்தான் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுகிறது என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை! எனவே தீபாவளி அன்று முழுமையாக பட்டாசு வெடிக்க தடை விதித்து இருப்பதை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது பட்டாசு தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அந்த வழக்கின் போக்கை பொறுத்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் எனக்கு ஒரு மனு மீதான விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

Exit mobile version